படம் : நான் மகான் அல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ராகுல் நம்பியார்
வரிகள் : முத்துகுமார்
வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா
வா வா..
வானத்தில் ஏறி ஏணைக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ
கவலை நம்மை சில நேரம் கூரைப்போட்டுக்கொண்டாடும்
நீ என்னைத் தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலைச்சேரும் நதியாவும் தன்னைத்தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை
புரிந்தாலும் துயரம் இல்லை
வா வா..
ஆஹா ஹா ஹா இரவைப்பார்த்து மிரலாதே
இதயம் வேர்த்துத் துவலாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகுத் தெரியாதே
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்துப்போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
வா வா..
படம் : வாரணம் ஆயிரம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக், பிரசன்னா
வரிகள் : தாமரை
விரும்பி கேட்டவர் : புகழேந்தி
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (அவ என்ன )
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒ - ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…
எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ -.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!
துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ(3)
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல..
வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ(3)
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...
ஒண்ணுக்குள்ள ஒண்ணா...
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே..
படம் : விண்ணைத்தாண்டி வருவாயா
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரேயா கோஷல்
வரிகள் : தாமரை
விரும்பி கேட்டவர் : புகழேந்தி
கடலினில் மீனாக இருந்தவள் நான்உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்துடித்திருந்தேன் தரையினிலேதிரும்பிவிட்டேன் கடலிடமேஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்உனை நான் கொல்லாமல்கொன்று புதைத்தேனேமன்னிப்பாயா மன்னிப்பாயாமன்னிப்பாயா(ஒரு நாள்..)கண்ணே தடுமாறி நடந்தேன்நூலில் ஆடும் மழையாகி போனேன்உன்னால்தான் கலைஞனாய் ஆனேனேதொலை தூரத்தில் வெளிச்சம் நீஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயேமேலும் மேலும் உருகி உருகிஉனை எண்ணி ஏங்கும்இதயத்தை என்ன செய்வேன்ஓஹோ உனை எண்ணி ஏங்கும்இதயத்தை என்ன செய்வேன்ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்உள்ளே உள்ள ஈரம் நீதான்வரம் கிடைத்தும் தவர விட்டேன்மன்னிப்பாயா அன்பேகாற்றிலே ஆடும் காகிதம் நான்நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்என் கலங்கரை விளக்கமே(ஒரு நாள்..)அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்அன்பிலார் எல்லாம் தமக்குரியர்அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்குபுலம்பல் என சென்றேன்புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீபூவாயா காணல் நீர் போலே தோன்றிஅனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்(ஒரு நாள்..)(கண்ணே..)
படம் : விண்ணைத்தாண்டி வருவாயா
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : கார்த்திக்
வரிகள் : தாமரை
விரும்பி கேட்டவர் : புகழேந்தி
ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா
நேற்றும் இரவில்
உன்னோடு இருந்தேன்
அதை நீயும்
மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட
விண்ணைத்தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா
ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா
உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில்தானே
இரு துருவம் சேறும் அந்த ஓர் இடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே..
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா
படம் : போக்கிரி ராஜா
இசை : விஸ்வநாதன்
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
விரும்பி கேட்டவர் : புயலமன்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
மாலையில் மல்லிகை அந்தியில் பஞசனை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞசனை
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ
க்ல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காதா பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்ப்பில் குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்