படம் : மீண்டும் கோகிலா
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ், எஸ். பீ. ஷைலஜா
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடிபின்னல் விழுந்தது போல் எதையோபேசவும் தோணுதடிசெல்லம்மா பேசவும் தோணுதடிசின்னஞ்சிறு வயதில்...மோகனப் புன்னகையில் ஓர்நாள்மூன்று தமிழ் படித்தேன்சாகச நாடகத்தில் அவனோர்தத்துவம் சொல்லி வைத்தான்உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்ஊமையைப் போலிருந்தேன்ஊமையைப் போலிருந்தேன்கள்ளத்தனம் என்னடி எனக்கோர்காவியம் சொல்லு என்றான்சின்னஞ்சிறு வயதில்...வெள்ளிப் பனியுருகி மடியில்வீழ்ந்தது போலிருந்தேன்பள்ளித்தலம் வரையில் செல்லம்மாபாடம் பயின்று வந்தேன்காதல் நெருப்பினிலே எனதுகண்களை விட்டு விட்டேன்மோதும் விரகத்திலே... மோதும் விரகத்திலே செல்லம்மா சின்னஞ்சிறு வயதில்...
படம்: நீங்கள் கேட்டவை
இசை:இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலாபிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலாஅலை போலவே விளையாடுமேசுகம் நூறாகுமேமண் மேலே துள்ளும் மான் போலே
பிள்ளை நிலா..என்னாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளைதென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளைகையிரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம்பாடும்..கண்கள்..மூடும்..
பிள்ளை நிலா..ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தால்காளடியில் பூமி எல்லாம் அடங்கும்சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளர்ந்தால்ஆகாயம் வந்து இங்கே வணங்கும்எங்களா தாயே உயிர் சுமந்தாயேஎங்களா தாயே உயிர் சுமந்தாயேகந்தலிலே முத்துச் சரம் காப்பாத்தி கட்டி வைத்தாய்நீயே..எங்கள்..தாயே..
பிள்ளை நிலா..
படம் : அகல் விளக்கு
பாடியவர்கள் : S.P.ஷைலஜா & கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் : கங்கைஅமரன்
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பது தான் ஏனோ.... ஏதோ நினைவுகள்...
மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம் வான்வெளி எங்கும் என் காதல் கீதம் பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம் தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம் ஏதோ நினைவுகள்..
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்..ம..ம்ம் நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம்..ம..ம்ம் காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம்
ஏதோ நினைவுகள்..
படம் : சிகரம்
இசை : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
அகரம் இப்போ சிகரமாச்சுதகரம் இப்போ தங்கமாச்சுகாட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சுஅகரம் இப்போ சிகரமாச்சுதகரம் இப்போ தங்கமாச்சுகாட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சுசங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதிசங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதிஅகரம்...கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்னமழை வெள்ளம் போகும்.. கரை ரெண்டும் வாழும்காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்னபொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்அன்புக்கு உருவமில்லைபாசத்தில் பருவமில்லைவானோடு முடிவுமில்லைவாழ்வோடு விடையுமில்லைஇன்றென்பது உண்மையே..நம்பிக்கை உங்கள் கையிலே..அகரம்...தண்ணீரில மீன்கள் வாழும்கண்ணீரில் காதல் வாழும்ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானேபசியார பார்வை போதும்பரிமாற வார்த்தை போதும்கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்தலைசாய்க்க இடமா இல்லைதலைகோத விரலா இல்லைஇளங்காற்று வரவா இல்லைஇளைப்பாறு பரவாயில்லைநம்பிக்கையே நல்லது..எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது...அகரம்...
படம்: பிரியா
இசை: இளையராஜா
வரிகள்: பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
ஏ பாடல் ஒன்று ராகம் ஒன்று சேரும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்மின்னல் உந்தன் பெண்மை என்னை தாக்கும் ஆயுதம்(2)மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹோய் ஹோய் (2) என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழேதேனில் ஆடும் திராட்சை நீயே ஏ பாடல் ஒன்று...தீபம் கொண்ட கண்கள் என்னை நோக்கும் காதலில் (2) தாகம் கொண்ட நெஞ்சம் என்னை பார்க்கும் ஜாடையில் ஹோய் ஹோய்(2) இளம் காதல் ராஜா கண்ணா உந்தன் நெஞ்சில் ஆடும் தேவி நானேஏ பாடல் ஒன்று..நேரம் இன்ப நேரம் விழி போடும் ஓவியம் (2) ஓரம் நெஞ்சில் ஓரம் சுவையாகும் காவியம் (2) ஒரு மாலை நேரம் மன்னா உந்தன் மார்பில் ஆடும் மாலை நானே ஏ பாடல் ஒன்று..
படம் : ஊமைவிழிகள்
பாடல் : கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : மனோஜ் ஜியன்
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்
நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி, அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி, அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்
நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலை, புது வாழ்வுக்கெங்கே நினைவு
நிலைமாறும் உலகில்...
ஆராரோ...ஆரிரரோ.... ஆராரோ...ஆரிரரோ.... (2)
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்
நிலைமாறும் உலகில்...
படம் : அக்னி நட்சத்திரம்
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா
இசை : இளையராஜா
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வானம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசந்தம்
வா வா அன்பே அன்பே ...
நீளம் கொண்ட கண்ணும்
மேகம் கொண்ட நெஞ்சும்
காலம்தோறும் என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
பாயை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த நானே
இதயம் முழுதும் எனது வசந்தம்
வா வா அன்பே அன்பே ...கண்ணன் வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
கண்கள் தீரும் காதல் எனும் ஓவியம்
காற்று வாங்கும் மூச்சிலும்
கண்ணி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
உன் தோலில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசந்தம்
வா வா அன்பே அன்பே ...
படம்: பாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், சித்ரா
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
ஆண்: தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலேதென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலேஇசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்(தென்பாண்டி)பெண்: வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையேஆண்: பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையேபெண்: அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதேஆண்: தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையேதாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையேபெண்: தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையேஆண்: மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே(தென்பாண்டி)ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மாஅன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மாபெண் : கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலேபாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமேஆண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்பெண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்ஆண்: வாழ்த்துவேன் உனை போற்றுவேன் வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
பெண்: காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே(தென்பாண்டி)
படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.பி.பாலு
பாடலாசிரியர்: வாலி
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்எல்லோரும் மொத்ததிலே சந்தோச தெப்பத்திலேதள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹாய்..காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழச எல்லாம் சுட்டு தள்ளுபுதுசா இப்போ பிறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா.. டோய்...பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்னதோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா.. டோய்..ஊதக்காற்று வீச உடம்புக்குள்ள கூசகுப்ப கூளம் பத்தவச்சி காயலாம்தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளைபொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்புஅத்தனையும் தித்திக்கிற நாள் தான் .. ஹாய்காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்எல்லோரும் மொத்ததிலே சந்தோச தெப்பத்திலே ஹ ஹாய்காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்பந்தம் என்ன சொந்தம் என்ன போனால் என்ன வந்தால் என்னஉறவுக்கெல்லாம் கவலைப்பட்டால் ஜென்மம் நானில்லை ஹாஹ..பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்கஅவனை தவிற உறவுக்காரன் யாரும் இங்கில்லேஉள்ள மட்டும் நானே உசிரை கூடத்தானேஎன் நண்பன் கேட்டால் வாங்கிக்கன்னு சொல்லுவேன்என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாருநட்பை கூட கற்பைப்போல எண்ணுவேன்சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டுபாட்டு பாடும் வானம்பாடி நாம் தான் .. ஹாய்காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு காவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்எல்லோரும் மொத்ததிலே சந்தோச தெப்பத்திலேதள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹாய்..ஹ்ஹோய்காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்
படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே. ஜே.ஜேசுதாஸ், S.ஜானகி
வரிகள்: வாலி
பழமுதிர்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைதான் அதற்காகத்தான்
நான்தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்
பழமுதிர்சோலை எனக்காகத்தான்..
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட
ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம்
பறந்திட வேண்டும்
பனி மலை மேல் நாம்
மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
பழமுதிர்சோலை எனக்காகத்தான்..
பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நீங்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய் என கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்த்து இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட
பழமுதிர்சோலை எனக்காகத்தான்..
படம்: அவள் ஒரு தொடர் கதை
இசை: M.S. விஸ்வநாதன்
பாடியவர் : கே. ஜே. ஜேசுதாஸ்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2)இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சிகொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சிஆதி வீடு அந்தம் காடுஇதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்?உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சிகாற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சிகொண்டதென்ன கொடுப்பதென்ன?இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்அது தெரியாமல் போனாலே வேதாந்தம்மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சிஎன்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சிஉண்மை என்ன பொய்மை என்னஇதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? தெய்வம் தந்த வீடு...
படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன்
விரும்பி கேட்டவர்: சௌமியா
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூடபெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆடஆகாய வெண்ணிலாவே...ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்றுபெண்: தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்றுஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆடபெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட ஆகாய வெண்ணிலாவே..பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம் ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம் கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்னபெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்டஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்டஆகாய வெண்ணிலாவே..
படம்: ரெட்டை வால் குருவி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்..
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை
என் ஆவி நீயே தேவி
ராஜ ராஜ சோழன் நான்..
கல்லூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளம் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொள்ளாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் இன்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாகிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே
பொன்மானே கேளாய் ராணி
ராஜ ராஜ சோழன் நான்..
படம்: சொல்லத் துடிக்குது மனசு
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்வாசல் என் வாசல் உன் பூங்காவனம்வாய் பேசிடும் புல்லாங்குழல்நீதானொரு பூவின் மடல்பூவே செம்பூவே...நிழல் போல நானும் நடை போட நீயும்தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாதுநான் வாழும் வாழ்வே உனக்காகத்தானேநாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனேஎன்னாளும் சங்கீதம் சந்தோஷமேவாய் பேசிடும் புல்லாங்குழல்நீதானொரு பூவின் மடல்பூவே செம்பூவே...உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானேபலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானேஉனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மைவிதி என்னும் நூலில் விளையாடும் பொம்மைநான் செய்த பாவம் என்னோடு போகும்நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்இந்நாளும் எந்நாளும் உல்லாசமேவாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல்பூவே செம்பூவே...