RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...
தேவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஊனம் ஊனம் ஊனம் - பொற்காலம்

படம் : பொற்காலம்
இசை : தேவா
பாடியவர் : தேவா
விரும்பி கேட்டவர் : கார்த்தி
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது
ஊன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அதை விட அரிது

ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்

ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ

.. ..
கெட்ட பையன் எல்லாருமே கை இருந்தும் ஊனம்
அத கண்டிருக்கேன் நானும்,
நீங்க யார பாத்து ஊனமுன்னு சொல்றீங்கோ..
கடன் கொடுத்தவன் எதுர வந்தா கடன் பட்டவன் ஊமை
இத கண்டிருகோம் நாம
ஏங்க வாயிலாத ஜீவன்கள வையரிங்கோ
காட்சி இங்க நல்லாலே கண்ணு கூட வேணாங்கோ
வாழ்வு நெஞ்சில் இருக்கையிலே வாழ்வு கூட வேணாங்கோ..

ஊனம் என்னடா ஊனம்
அட.. ஞானம் தான வேணும்
அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும்

ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ ... ( 2 )

ஆத்தங்கர ஓரத்துல வளந்திருக்குது தென்ன
அது பகைச்சிருக்குது கன்ன
அதில் தேங்காய வெருத்தவங்க யாருங்கோ..

மதுரையில கோயிலைத்தான் பாத்ததுண்டா கண்ணு
அதில் ஒத்த கோபுரம் ஒன்னு
அதில் மீனாக்ஷி குடியிருக்கா பாருங்கோ
கண்ணதாசன் சொன்னாங்கோ
வைரமுத்து சொன்னாங்கோ
ஊனம் என்பது மனசு தான்னு உனக்கும் எனக்கும் சொன்னாங்கோ

ஊனம் என்னடா ஊனம்
அட.. ஞானம் தான வேணும்
அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும்

ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்

ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ

இப்பாடலின் வீடியோ இங்கே..

முதன் முதலில் பார்த்தேன்

படம்: ஆஹா
இசை: தேவா
பாடியவர் : ஹரிஹரன்
விரும்பி கேட்டவர்: சரண்யா
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா?

முதன் முதலில்..


நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே

முதன் முதலில்..


உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
என் சுவாசக் காற்றில் எல்லாம்
உன் ஞாபகம் உன் ஞாபகம்

முதன் முதலில்..
இப்பாடலின் வீடியோ இங்கே..
Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape