RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...
S.P.பாலசுப்ரமணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
S.P.பாலசுப்ரமணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எம்மா எம்மா காதல் பொன்னம்மா - 7ஆம் அறிவு

படம் : 7ஆம் அறிவு 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 
பாடியவர் : SPB, ஸ்வேதா மேனன் 
விரும்பி கேட்டவர் : மஹாலக்ஷ்மி  

எம்மா எம்மா காதல் பொன்னம்மா

நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம்போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கனவுக்குள்ளே அவ வைச்சேனே
என் கண்ண ரண்ட திருடிப் போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சு காத்த வாங்கிப் போனாளே



பொம்பளைய நம்பி
கெட்டுப் போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் 
இப்ப கடைசியில் நின்னேன்
முத்து எடுக்க போனா 
உன் மூச்டங்கும் தன்னால்
காதல் முத்தெடுத்த பின்னால் 
மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முள்ளுடா
அதை கடந்து போனா ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை
எம்மா எம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா
ஓட்ட போட்ட மூங்கில்
அது பாட்டுப் பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்டப் பின்னும்
மனம் உன்ன பத்திப் பாடும்
வந்துப் போனதாரு
ஒரு நந்தவனத்தேரு
நம்பி நொந்து போனன் பாரு
அவ பூவு இல்லை நாறு
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல் நெருடாதே
மனம் தாங்காதே  தாங்காதே
வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டிப் போங்கடா
எம்மா எம்மா காதல் பொன்னம்மா

நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம்போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கனவுக்குள்ளே அவ வைச்சேனே
என் கண்ண ரண்ட திருடிப் போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சு காத்த வாங்கிப் போனாளே…..

விடிய விடிய சொல்லித்தருவேன் - போக்கிரி ராஜா

படம் : போக்கிரி ராஜா
இசை :
விஸ்வநாதன்
பாடியவர் :
S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
விரும்பி கேட்டவர் : புயலமன்

விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்

விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்

மாலையில் மல்லிகை அந்தியில் பஞசனை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞசனை
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்

சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்

வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ
க்ல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காதா பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்

என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்

பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்

மார்ப்பில் குங்குமம் காரணம் சங்கமம்

ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி

சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்


சின்ன மணிக்குயிலே

படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
கூக்கூ எனக் கூவுவது ஏனடி
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாடை செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே..

பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்க
நான் சாமியை வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே...
இப்பாடலின் வீடியோ இங்கே..

என்ன சத்தம் இந்த நேரம்

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா.. அடடா..

என்ன சத்தம்..


கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லை
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ

என்ன சத்தம்..


கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுமே
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய்த்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓசையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள்

என்ன சத்தம்..

இப்பாடலின் வீடியோ இங்கே..
படம் : ஜோடி
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், மகாலக்ஷ்மி ஐயர்
வரிகள் : வைரமுத்து
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
வெள்ளி மலரே வெளி மலரே...
வெள்ளி மலரே வெள்ளி மலரே

நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏந்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

ஓ...
வெள்ளி மலரே வெள்ளி மலரே

ஏ...
மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்
ஏ வெக்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்
வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே

வெள்ளி மலரே...
இளந்தளிரே...

ஏ...
வனங்களில் பூந்தளிர் தேடும்போதும் நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம் அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
மழையிலும் கூவும் மரகதக் குயில் நான் இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்

வெள்ளி மலரே வெளி மலரே

நேற்றுவரை..
இளந்தளிரே..

வெள்ளி மலரே வெளி மலரே...
இப்பாடலின் வீடியோ இங்கே..

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்

படம் : பொல்லாதவன்
இசை :
G.V ப்ரகாஷ்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், யோகி B & சுனிதா சாரதி
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடி

முதன்முறை என் விரல் பூக்கள்
பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ்
பறித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய்
மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும்
கிடைத்தது வீட்டுக்குள்ளே

காதலே ஒருவகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித்
தலைகீழாகத் தொங்கிடுமே
ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

என் பேர் கேட்டால் உன் பேர்
சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம்
போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப்
படித்தேன் கிறக்கத்திலே
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம்
கொடுத்தேன் மயக்கத்திலே

ஊ ஆ ...ஆ ஊ ஆ.... ஊ ஆ ரா....... ரா ரே

ஓ... காதலும் ஒருவகை போதைதானே
உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல
ஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால்
புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல

உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடா

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே
அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடா

ஆ... ஆ....ஆ ஆ .. ஆ ஆ ...ஆ ஆ.....
இப்பாடலின் வீடியோ இங்கே..

அகரம் இப்போ சிகரமாச்சு

படம் : சிகரம்
இசை : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி

அகரம்...

கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்ன
மழை வெள்ளம் போகும்.. கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை
இன்றென்பது உண்மையே..
நம்பிக்கை உங்கள் கையிலே..

அகரம்...

தண்ணீரில மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியார பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை
தலைகோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது..
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது...

அகரம்...
இப்பாடலின் வீடியோ இங்கே..

ஒட்டகத்த கட்டிக்கோ

படம்: ஜென்டில் மேன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள்: வாலி

விரும்பி கேட்டவர்: சௌமியா

ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை

ஒட்டகத்த..

கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது
உள்ளங்கைத் தேனே கள்வன் நான்தானே
கல்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானே
பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை

ஒட்டகத்த..

உடைவாளில் நீயெந்தன் உடைதொட்ட அந்நேரம்
உன் பார்வை எந்தன் உயிர்தொட்ட தருவாயோ
கோழைக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்க்கை என்னாகும்
உன் வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே பொன்னாகும்
நீயென்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்
முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்

ஒட்டகத்த..
இப்பாடலின் வீடியோ இங்கே..

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

படம்: உழவன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்: சௌமியா

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ

பெண்ணல்ல பெண்ணல்ல..

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் சென்பகப்பூ....

பெண்ணல்ல பெண்ணல்ல..


தென்றலைப் போல நடப்பவள்
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு..
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

பெண்ணல்ல பெண்ணல்ல..


சித்திரை மாத நிலவொளி..
அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தைப் போல இருப்பவள்
வெல்லப் பாகைப் போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனைப் பூமுடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்...

பெண்ணல்ல பெண்ணல்ல..
இப்பாடலின் வீடியோ இங்கே..

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர்: சௌமியா
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம்..


போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா .. (2)
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே

சங்கீத மேகம்..


உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பாவனைகள் போகின்றதே .. (2)
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே

சங்கீத மேகம்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

இளமையெனும் பூங்காற்று

படம்: பகலில் ஒரு இரவு
இசை: இளையராஜா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: சௌமியா

இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் .. (2)

இளமையெனும்..

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

இளமையெனும்..

அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

இளமையெனும்..

மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

இளமையெனும்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

சங்கீத வானில்

படம்: சின்ன பூவே மெல்ல பேசு
இசை & வரிகள்: S.A.ராஜ்குமார்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

தோள் மீது வா...உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே..

சங்கீத வானில்...

ஆனந்த ராகங்களில்...நான் ஆலாபனை செய்கிரேன்..
நான் உந்தன் கீதம் தன்னை...ஆராதனை செய்கிரேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே...
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே...
கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே...
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

பொன்மாலை வேளைகளில்...உண் வாசல் நான் தேடினேன்
கண்ணென்னும் ஓடங்களில்...கரை தேடி நான் ஓடினேன்
கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே..
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே..
உன்னில் தினம் உடல் கரைகின்றதே..
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே...
தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உண் மஞ்சம் தானே...

சங்கீத வானில்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா

படம்: செந்தூர பூவே
இசை: மனோஜ் ஜியன்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை நீரிலே தன் நிலை மீறியே
ஒரு கதி போல என் நெஞ்சம் அலை மோதுதே ...

ஓஓஓஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெல்லைக்கிங்கே களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெல்லைக்கிங்கே களங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டே ன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இப்பாடலின் வீடியோ இங்கே..

காலை நேரப் பூங்குயில்

படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
வரிகள்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தோனுது

கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குது
கேட்டப் பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம்

காலை நேரப் பூங்குயில்..

மேடை போடும் பெளர்ணமி
ஆடிப்பாடும் ஓர் நதி ... (2)

வெள்ள ஒளியினில் மேகலை
மெல்ல மயங்குது என் நிலை

புதிய மேகம் கவிதை பாடும் .. (2)

பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்

காலை நேரப் பூங்குயில்..

இளமை என்னும் மோகனம்
இணைந்து பாடும் என் மனம்... (2)

பட்டு விரித்தது புல்வெளி
பட்டுத் தெறித்தது விண்ணொளி

தினமும் பாடும் எனது பாடல்... (2)

காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்

காலை நேரப் பூங்குயில்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

அடி ராக்கம்மா

படம்: தளபதி
இசை: இளையராஜா
வரிகள்: வாலி
பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
விரும்பி கேட்டவர்: சௌமியா & ஜெய் கணேஷ்

அடி ராக்கம்மா கையைத் தட்டு

புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அடி ராக்கோழி மேளம் கொட்டு
இந்த ராசாவின் நெஞ்சத் தொட்டு

அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப்பூ மாலை கட்டு
அதை ராசாத்தி தோளில் இட்டு
தினம் ராவெல்லாம் தாளம் தட்டு

இது கட்டுக்காவல் இது ஒத்துக்காது
இதைக் கட்டிப் போட ஒரு சூரன் ஏது

ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்
மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊரு சனம் யாவும் ஒத்துமையாச் சேரும்
வம்பும் தும்பும் இல்லை நீ பாரு

மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்
எட்டனும் தம்பி அடி ஜோராக
வைக்கிற வானம் அந்த வானையே
தைக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடு

முத்தம்மா முத்தம் சிந்து
பனி முத்துப் போல் நித்தம் வந்து
அட மாமா நீ ஜல்லிக்கட்டு
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு
அடி பக்கம் நீதான் ஒரு வைக்கப்போரு
உன்ன கொஞ்சம் மேஞ்சா என்ன அக்கப் போரு

ஜாங்குஜக்கு..

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட மாமா நீ ஜல்லிக்கட்டு
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு


வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஒளி விளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு
பட்டப் பகலாச்சு எங்கும் இன்பம் என்னும் பூப்பூத்து

நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்
உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்

கண்ணம்மா கன்னம் தொட்டு
சொகம் காட்டம்மா சின்ன மெட்டு
பூமாலை வெச்சுப்புட்டு
புது பாட்டெல்லாம் வெளுத்துக் கட்டு

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்ப்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு
அட ஒன்னப் போல இங்கு நானுந்தாண்டி
அடி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி

ஜாங்கு ஜக்கு..

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு
இப்பாடலின் வீடியோ இங்கே..

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர் : சௌமியா
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிக்கு கவிதாஞ்சலி

அஞ்சலி..


காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி அணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

பூவே..


சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி

பூவே..

அஞ்சலி..

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
பூவுக்குள் கௌவாகி மலர்ந்தவளா?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி

பூவே..
இப்பாடலின் வீடியோ இங்கே..

இது ஒரு பொன்மாலை பொழுது

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
ஹே ஹோ ஹூம்... ல ல லா...
பொன்மாலை பொழுது...

இது ஒரு பொன்மாலை பொழுது...
வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலை பொழுது...

ம்ம்ம்ம் ஹே ஹா ஹோ... ம்ம்ம்...

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்...
ராத்திரி வாசலில் கோலமிடும்... (2)
வானம் இரவுக்கு பாலமிடும்...
பாடும் பறவைகள் தாளமிடும்...
பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ...

இது ஒரு..


வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்... (2)
ஒரு நாள் உலகம் நீதி பெறும்...
திருநாள் நிகழும் தேதி வரும்...
கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன்...

இது ஒரு..


ஆ... ஹே ஹோ ஹா ல ல லா...
ம்ம்ம்ம் ஹே ஹோ ஹா ம்ம்ம்.
இப்பாடலின் வீடியோ இங்கே..

மடை திறந்து தாவும் நதியலை நான்

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்


மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்..

மடை திறந்து..


நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்..

மடை திறந்து..

இப்பாடலின் வீடியோ இங்கே..

முன் பனியா முதல் மழையா

படம்: நந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், சுபா
விரும்பி கேட்டவர் : சௌமியா
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே

முன் பனியா..


மனசில் எதையோ மறைக்கும் விழியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே

என் இதயத்தை... என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்... உன் விழியினில் அதனை
இப்போது கண்டுபிடித்துவிட்டேன்

இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே...

முன் பனியா..


சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதற்கு
நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ

என் பாதைகள் என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே....

முன் பனியா..
இப்பாடலின் வீடியோ இங்கே..

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே

படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.பி.பாலு
பாடலாசிரியர்: வாலி
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்
காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

எல்லோரும் மொத்ததிலே சந்தோச தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹாய்..

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழச எல்லாம் சுட்டு தள்ளு
புதுசா இப்போ பிறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா.. டோய்...

பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா.. டோய்..

ஊதக்காற்று வீச உடம்புக்குள்ள கூச
குப்ப கூளம் பத்தவச்சி காயலாம்

தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான் .. ஹாய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

எல்லோரும் மொத்ததிலே சந்தோச தெப்பத்திலே ஹ ஹாய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

பந்தம் என்ன சொந்தம் என்ன போனால் என்ன வந்தால் என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்டால் ஜென்மம் நானில்லை ஹாஹ..

பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க
அவனை தவிற உறவுக்காரன் யாரும் இங்கில்லே

உள்ள மட்டும் நானே உசிரை கூடத்தானே
என் நண்பன் கேட்டால் வாங்கிக்கன்னு சொல்லுவேன்

என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பைப்போல எண்ணுவேன்

சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான் .. ஹாய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு காவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

எல்லோரும் மொத்ததிலே சந்தோச தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹாய்..

ஹ்ஹோய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்
இப்பாடலின் வீடியோ இங்கே..
Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape