RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...
யுவன் சங்கர் ராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யுவன் சங்கர் ராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வா வா நிலவப்புடிச்சித்தரவா - நான் மகான் அல்ல

படம் : நான் மகான் அல்ல 
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ராகுல் நம்பியார்
வரிகள் : முத்துகுமார் 
வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா
வா வா..

வானத்தில் ஏறி ஏணைக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ

கவலை நம்மை சில நேரம் கூரைப்போட்டுக்கொண்டாடும்
நீ என்னைத் தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலைச்சேரும் நதியாவும் தன்னைத்தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை
புரிந்தாலும் துயரம் இல்லை
வா வா..

ஆஹா ஹா ஹா இரவைப்பார்த்து மிரலாதே
இதயம் வேர்த்துத் துவலாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகுத் தெரியாதே
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்துப்போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
வா வா..

ஊரோரம் புளியமரம் - பருத்தி வீரன்

படம் : பருத்தி வீரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : பாண்டி, லக்ஷ்மி, சரோஜா, கலா
விரும்பி கேட்டவர்கள் : உமா & ப்ரியா

ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும்
நாம்பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையய்
கூடுனமே கூடுனமே கூட்டுவண்டிக் காளைபோலே
மாட்டுனமே மாட்டுனமே நாரப்பய கையுமேலே

நிறுத்துங்கடி ஏ நிறுத்துங்கடி நிறுத்துங்கறேன்ல
பாடுங்கடின்னா என்ன நக்கலா
ஏய் நீ வா நீ இங்கே வா எல்லாம் வரிசையா நில்லு
நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடணும் என்ன
யோவ் இங்க பாருய்யா கண்டபக்கம்லாம் கையவைச்சின்னா
உனக்கு மரியாதை இல்லை ஆமா
இங்க பாருய்யா வெக்கத்தை ஏய் அட்றா

நாடறிஞ்ச அழகிகளா நீங்க எங்க ஜோடி
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடி
கத்தரிப்பூ ரவுக்கை போட்ட சின்னப்பைங்கிளி
உன்னை Quarter-க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி

குத்து-ன்னா இப்படித்தான் குத்தனும்

ஆளில்லாத காட்டுக்குள்ளே பயலே
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி
Night எல்லாம் ஆட்டம் போட்டு
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா எனக்கு காலு
அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு
உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்ன
இந்த பருவமுள்ள பையங்கிட்டே
நீயும் பாசாங்கம் பண்ணாதடி பண்ணாதடி
பருவமுள்ள பையங்கிட்டே
நானும் பாசாங்கம் பண்ணவில்லை
பாசாங்கம் பண்ணுரன்டு நீயும்
அறிவுகெட்டு பேசாதடா நீ அறிவுகெட்டு பேசாதடா

அடி மாடிமேலே மாடிவெச்சு மாரளவு ஜன்னல் வெச்சு
அப்டி போடு சித்தப்பு
எட்டி எட்டிப் பாத்தாலுமே எரவப்பொண்டாட்டி நீதான்டி
ஆஹா ஆஹா ஆஹா
அடி காதறுந்த மூளி உன்னைக் கட்டுவன்டி தாலி
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு வெக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய்
பொசக்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடா
நெத்தியிலே ஆமோய்
நெத்தியிலே பொட்டுவைச்சு நீவரணும் சேலைகட்டி
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே
நீ மனசுவெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை
கோணாங்கிரப்பு வேட்டி குதிங்கால் உயர்த்தி கட்டி
ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு
புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும்வழியிலே
உங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கமுடியலை

போடா போடா பொடிப்பயலே புத்திகெட்ட மடப்பயலே
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானாம்
உனக்கும் எனக்கும் சண்டை இப்போ ஒடையப் போகுது மண்டை
அடியே குட்டப்புள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கவிடாது
ஆமோய்

என்ன நாயனகாரரே சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீயளே
வாயில வெச்சு ஊதவேண்டியதுதானே
நீங்க ஊதுரியளா நான் ஊதவா..
இப்பாடலின் வீடியோ இங்கே..

ஏழேழு தலைமுறைக்கும் - கோவா

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: கங்கை அமரன்
பாடியவர்கள்: பவதாரினி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன்

ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புறம் பண்ண புறம்
முல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம்
எல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம்
முல்லையாரு..
ஏழேழு...

வீரப்பாண்டி மாரியம்மா எங்குமுள்ள காளியம்மா
தாய் சீல காரியம்மா தந்தா வங்கடம்மா
பாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு
கூட்டி எடுத்துத் தந்த பாட்டு பொங்குதம்மா
பட்டிக்காட்ட விட்டுப்புட்டு பட்டணத்தில் குடி புகுந்து
மெட்டுகளை கட்டி தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு
ஆத்தி என்ன சொல்ல
அன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு
அப்பருந்து இப்ப வர எங்களுக்கு என்ன குறை
எப்போழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை
ஏழேழு...

அள்ளி உறளுல நெல்ல போட்டு
அழுத்தி அழுத்தி குத்துங்கடி
அத்த மகனைத்தான் பாத்துக்கிட்டு
அமுக்கி புடிச்சு குத்துங்கடி
நம்ம நெல்லு குத்துகிற அழகைக் கண்டு
மச்சான் நேருல வர்றத பாருங்கடி
அவன் நேருல வர்றத பார்த்துப்புட்டு
நம்ம நெஞ்சு துடிக்குது கேளுங்கடி

மேத்து மழை சாரலிலே மேஞ்சு வந்த மேகம் எல்லாம்
கோர்த்து தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேட்கும்
நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது
ஊர் அறிய கேட்கும்போடு உற்சாகமா தோணும்
அப்பனோட அறிவிருக்கு அன்னையோட அறவனைப்பு
சத்தியமா நிச்சயமா அஸ்திவரம் எங்களுக்கு
தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு
வயலுல வெளஞ்ச நெல்லு நகரத்த தேடி வந்து
பசிகளை தீர்ப்பதுப்போல் பாரு எங்க கதை
ஏழேழு...

சிறகுகள் வந்தது

படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஜாவேட் அலி, மதுஸ்ரீ
விரும்பி கேட்டவர்: அர்ச்சனா.N.M

சிறகுகள்
வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்த்தது உள்ளே செல்ல
சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ
உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

கனவுகள் பொங்குது..
.

நதியே நீ எங்கே என்று
கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேடக் கூடாதா ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடைப்பதை யார் அறிவார்
கடல் நொடியின் கிடக்கும்
பலரின் கனவுகள் யார் அறிவார்
அழகே நீ எங்கே இருக்கிறாய்
வழித்தால் அன்பே நீ எங்கே இருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் நெஞ்சம்
எங்கே பூவின் உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே

உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில்
உள்ளே வழியே..

சிறகுகள் வந்தது..

எனக்கே நான் சுமையாய் மாறி
என்னை சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னை தேடி வந்தேனே
விழி நினைக்கிற நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடிக்கும் முன்னே
எந்தன் உயிர் ஒதுக்கி விடாது
உலகம் ஒரு புள்ளி யாதுவே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுகமோ வழியோ எல்லை மீறுதே

சிறகுகள்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

இரவா பகலா குளிரா வெயிலா

படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: பழனி பாரதி
விரும்பி கேட்டவர்: அர்ச்சனா.N.M

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை எதோ செய்யுதடி, காதல் இதுதானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்

நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம்தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

இரவா பகலா குளிரா வெயிலா..

என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா

முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு
இப்பொது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

இரவா பகலா குளிரா வெயிலா..

வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு

மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளிலே சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட

சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன்

அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ளே உன்னை அணைப்பேன்

இரவா பகலா குளிரா வெயிலா...
இப்பாடலின் வீடியோ இங்கே..

ஒரு நாளில் வாழ்க்கை

படம்: புதுப்பேட்டை
இசையமைத்து பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா.முத்துக்குமார்
விரும்பி கேட்டவர்: பார்த்திபன்

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது

மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓ! கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓ! ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓ! கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓ! கண் மூடிக்கொண்டால்ஓஓஓஓஓஓ …

போர்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஓஓஓ! அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓ! இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓ! மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓ! அந்த கடவுளை கண்டால்ஓஓஓஓஓஓ …

அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓ! பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
ஓஓஓ! பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்
ஓஓஓ! கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்
ஓஓஓ! மறு பிறவி வேண்டுமாஓஓஓஓஓஓ …

எங்கெங்கோ கால்கள் செல்லும்

படம் : நந்தா
இசை : யுவன் சங்கர் ராஜா
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்


எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்..
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்..
உன் சொந்தம் இங்கு யார் யாரோ?
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ?
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு?

எங்கெங்கோ...

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே..
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்றில் அப்போதே..
எதனைக்கொண்டு நாம் வந்தோம்..?
எதனைக் கொண்டு போகின்றோம்..?
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே..

எங்கெங்கோ...

காற்றுக்கு யார் இங்கே பாட்டுச் சொல்லித் தந்தாரோ?
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டுத் தந்தாரோ?
வாழ்க்கை எங்கு போய்ச் சேரும்?
காலம் செய்யும் தீர்மானம்…
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது?

எங்கெங்கோ...

இப்பாடலின் வீடியோ இங்கே..

முன் பனியா முதல் மழையா

படம்: நந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், சுபா
விரும்பி கேட்டவர் : சௌமியா
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே

முன் பனியா..


மனசில் எதையோ மறைக்கும் விழியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே

என் இதயத்தை... என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்... உன் விழியினில் அதனை
இப்போது கண்டுபிடித்துவிட்டேன்

இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே...

முன் பனியா..


சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதற்கு
நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ

என் பாதைகள் என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே....

முன் பனியா..
இப்பாடலின் வீடியோ இங்கே..

அழகுக் குட்டிச் செல்லம்..

அழகுக் குட்டிச் செல்லம்
உன்னை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சுவிரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளைக் கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பிப் போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே
எனக்குப் பேசத் தெரியல‌
எனக்குத் தெரிந்த பாஷை பேச
உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

ரோஜாப்பூ கைரெண்டும்
காற்றோடு கதைபேசும்
உன் பின்னழகில் பெளர்ணமிகள்
தகதிமிதா ஜதிபேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால்வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை தோரணை

நீ தின்ற மண்சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழிகேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
கண்ணனே புன்னகை மன்னனே
Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape