படம்: திருவிளையாடல்
வரிகள் : கண்ணதாசன்
இசை : K.V. மகாதேவன்
பாடியவர் : K.B. சுந்தராம்பாள்விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?
ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
தண்டபாணித் தெய்வமே
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம் உண்டு
தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
படம்: பகலில் ஒரு இரவு
இசை: இளையராஜா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்
விரும்பி கேட்டவர்: சௌமியா
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஒரே வீணை ஒரே ராகம் .. (2) இளமையெனும்..தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது கண்ணை இழந்த வண்டு தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா இளமையெனும்..அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற அள்ளி அணைத்த கைகள் கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழுமுன் விழுந்தாள் எந்த உடலோ எந்த உறவோ இளமையெனும்..மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே இந்த நிலைதான் என்ன விதியோ இளமையெனும்..
படம் : ஜானி
பாடல் : கண்ணதாசன்
இசை : இளையராஜா
பாடியவர் : ஜென்சி
விரும்பி கேட்டவர்: புவனேஸ்வரி.K
என் வானிலே ஒரே வெண்ணிலாஎன் வானிலே ஒரே வெண்ணிலாகாதல் மேகங்கள் கவிதை தாரகைஊர்வலம்....என் வானிலே ஒரே வெண்ணிலாநீரோடை போலவே என் பெண்மைநீராட வந்ததே என் மென்மைநீரோடை போலவே என் பெண்மைநீராட வந்ததே என் மென்மைசிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதேவார்த்தைகள் தேவையாஆஆஆஆஆஎன் வானிலே ஒரே வெண்ணிலாநீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலேவெள்ளங்கள் ஒன்றல்லவாஆஆஆஆஆஎன் வானிலே ஒரே வெண்ணிலாகாதல் மேகங்கள் கவிதை தாரகைஊர்வலம்....என் வானிலே ஒரே வெண்ணிலா..
ஆல்பம் : கிருஷ்ணகானம்
வரிகள் : கண்ணதாசன்
இசை : விஸ்வநாதன்
விரும்பி கேட்டவர் : அனிதா ரமேஷ்
ஆயர்பாடி மாளிகையில்
தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஆயர்பாடி...
பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ .. (2)
அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
ஆயர்பாடி...
நாகப்படம் மீதில்
அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ... (2)
அவன் மோக நிலை கூட
ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
ஆயர்பாடி...
கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ... (2)
பொன்னழகைப் பார்ப்பதற்க்கும்
போதை முத்தம் பெறுவதற்க்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ..
ஆயர்பாடி...
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
வரிகள்: கண்ணதாசன்
விரும்பி கேட்டவர்: கார்த்தி
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே பருவம் என்னும் காட்டிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார்...சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்! நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்... இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா... காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே ஆஅ...........ஆஅ...........ஆஅ.............
படம்: முள்ளும் மலரும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்என் மீது மோதுதம்மா
செந்தாழம்பூவில்...பூ வாசம் மேடை போடுதம்மாபெண்போல ஜாடை பேசுதம்மாஅம்மம்மா ஆனந்தம்வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோமயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுதுஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுதுகாடுகள் மலைகள் தேவன் கலைகள்செந்தாழம்பூவில்...அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்மலையின் காட்சி இறைவன் ஆட்சிசெந்தாழம்பூவில்...இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனைஇதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனைஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுதுஉள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுதுமறவேன் மறவேன் அற்புத காட்சிசெந்தாழம்பூவில்...
படம்: தில்லு முல்லு
இசை: MS விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
ராகங்கள் பதினாறு உருவான வரலாறுநான் பாடும் போது அறிவாயம்மாராகங்கள் பதினாறு உருவான வரலாறுநான் பாடும் போது அறிவாயம்மாபல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?பதினாறு பாட சுகமானதுபல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?பதினாறு பாட சுகமானதுராகங்கள் பதினாறு உருவான வரலாறுநான் பாடும் போது அறிவாயம்மாகலை மாது தான் மீட்டும் இதமான வீணைகனிவான ஸ்வரம் பாட பதமானதுகலை மாது தான் மீட்டும் இதமான வீணைகனிவான ஸ்வரம் பாட பதமானதுஅழகான இளம் பெண்ணின் மேனி தான் கூடஆதார சுதி கொண்ட வீணையம்மாஅழகான இளம் பெண்ணின் மேனி தான் கூடஆதார சுதி கொண்ட வீணையம்மாராகங்கள் பதினாறு உருவான வரலாறுநான் பாடும் போது அறிவாயம்மாஇடையாட வளையாட சலங்கைகள் ஆடஇலையோடு கொடி போல நடமாடினாள்இடையாட வளையாட சலங்கைகள் ஆடஇலையோடு கொடி போல நடமாடினாள்உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மாஉலகாளும் உமையாளின் ராக பாவங்கள்ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மாராகங்கள் பதினாறு உருவான வரலாறுநான் பாடும் போது அறிவாயம்மாபல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?பதினாறு பாட சுகமானது ஆஆஆஆபல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?பதினாறு பாட சுகமானதுராகங்கள் பதினாறு உருவான வரலாறுநான் பாடும் போது அறிவாயம்மா
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
கடவுள்..
நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்ல போகிறேன்
ஓங்கிய பெரும் காடு
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே
ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு
அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே...ஆருயிரே...என் அத்தான்
கடவுள்..
கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா
ஆசை விமானத்தில் ஆனந்த மேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா
தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா
சிங்கார காலோடு சங்கீத தங்கைகள் சந்தோஷம் பாடுதம்மா
கடவுள்..
கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா
கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா
wish you both happy life happy happy married life
பண்பான வேடத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓடுதம்மா
பண்பான வேடத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓடுதம்மா
பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாண்டு பாடுதம்மா
கடவுள்..
ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா
உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா
அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா
அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான் இப்போது தெரிந்ததம்மா
கடவுள்..
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய்..
கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
கன்னிக்காய்..
மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
இரவுக்காய்..
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய்..
ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
ஏழக்காய்..
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய்..
உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ
உள்ளதெல்லாம்..
கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே...
நின்றது போல் நின்றாள் நெடுதூரம் பறந்தாள்
நிற்குமோ நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே...
செந்தமிழ்த் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
[நிலாவென...]
பைங்கனி இதழ்களில் பழரசம் தருவாள்
பருகிட தலைகுனிவாள்
காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ...
[காற்றினில்...]
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ?
[அவள் செந்தமிழ்த்...]
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கே பெண்ணே
பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ..
[செந்தமிழ்த்...]
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!மார்பு துடிக்குதுடி, பார்த்த இடத்திலெல்லாம் உன்னை போல் பாவை தெரியுது!என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு?நேற்றேடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு,என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு?நேற்றேடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு,
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்அந்த மரத்தில் மறைந்திருக்கும் துளிவிஷம்உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்அந்த மரத்தில் மறைந்திருக்கும் துளிவிஷம்நெஞ்சம் துடித்துடும் ராணி, நீயோ அடுத்தவன் தோழி!