RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...
ரஜினிகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினிகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அடி ராக்கம்மா

படம்: தளபதி
இசை: இளையராஜா
வரிகள்: வாலி
பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
விரும்பி கேட்டவர்: சௌமியா & ஜெய் கணேஷ்

அடி ராக்கம்மா கையைத் தட்டு

புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அடி ராக்கோழி மேளம் கொட்டு
இந்த ராசாவின் நெஞ்சத் தொட்டு

அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப்பூ மாலை கட்டு
அதை ராசாத்தி தோளில் இட்டு
தினம் ராவெல்லாம் தாளம் தட்டு

இது கட்டுக்காவல் இது ஒத்துக்காது
இதைக் கட்டிப் போட ஒரு சூரன் ஏது

ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்
மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊரு சனம் யாவும் ஒத்துமையாச் சேரும்
வம்பும் தும்பும் இல்லை நீ பாரு

மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்
எட்டனும் தம்பி அடி ஜோராக
வைக்கிற வானம் அந்த வானையே
தைக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடு

முத்தம்மா முத்தம் சிந்து
பனி முத்துப் போல் நித்தம் வந்து
அட மாமா நீ ஜல்லிக்கட்டு
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு
அடி பக்கம் நீதான் ஒரு வைக்கப்போரு
உன்ன கொஞ்சம் மேஞ்சா என்ன அக்கப் போரு

ஜாங்குஜக்கு..

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட மாமா நீ ஜல்லிக்கட்டு
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு


வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஒளி விளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு
பட்டப் பகலாச்சு எங்கும் இன்பம் என்னும் பூப்பூத்து

நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்
உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்

கண்ணம்மா கன்னம் தொட்டு
சொகம் காட்டம்மா சின்ன மெட்டு
பூமாலை வெச்சுப்புட்டு
புது பாட்டெல்லாம் வெளுத்துக் கட்டு

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்ப்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு
அட ஒன்னப் போல இங்கு நானுந்தாண்டி
அடி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி

ஜாங்கு ஜக்கு..

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு
இப்பாடலின் வீடியோ இங்கே..

ராகங்கள் பதினாறு..

படம்: தில்லு முல்லு
இசை: MS விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது ஆஆஆஆ
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
இப்பாடலின் வீடியோ இங்கே..

சின்னத் தாயவள்..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் வேண்டாம் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
இப்பாடலின் வீடியோ இங்கே..

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே...


பெண் குரல்:- கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை

குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை

பெண் குரல்: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா

பெண் குரல்: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

குழு: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

பெண் குரல்: இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்

குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்!

Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape