RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...
மற்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மற்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா - தமிழ் படம்

படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்வேதா
ஓ முஹலை ஓ முஹலை

ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா

ஓ மஹ..


ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ
ரஹதுல்லா சோனாலி

ஓ மஹ..

ஹா ஹா ஹோஹோ
ஹா ஹா..

சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா

மஹ..


ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா

ஹோ மஹ..
இப்பாடலின் வீடியோ இங்கே..

சிங்கம் என்றல் எம் தந்தை தான்..

படம்: அசல்
இசை : பரத்வாஜ்
பாடியவர் : பரத்வாஜ்


சிங்கம் என்றல்
எம் தந்தை தான்..
செல்வம் என்றல்
எம் தந்தை தான்..
கண் தூங்கினால்
துயில் நீங்கினால்
எம் தந்தை தான் !
எம் தந்தை தான் !
எல்லோருக்கும்
அவர் விந்தை தான்!
விண்மீன்கள் கடன் கேட்கும்
அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும்
அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள்
குளம் தாங்குமே!
அவர் பேரை சொன்னாலே
பகை நீங்குமே!
அழியாத உயிர்கொண்ட
எம் தந்தையே
ஆண்வடிவில் நீ என்றும்
எம் அன்னையே

வீரத்தின் மகனென்று
விழி சொல்லுமே!
வேழத்தின் இனமென்று
நடை சொல்லுமே!
நிலையான மனிதன் எனப்
பேர் சொல்லுமே!
நீதானே அசல் என்று
ஊர் சொல்லுமே!
உன் போல சிலரின்று
உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு
நிகராகுமா?

எப்போதும் தோற்காது
உன் சேவைதான்!
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்!
கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்தி தான்!
கடல்தாண்டிப் பொருள் ஈட்டும்
உன் கீர்த்தி தான்!
தலைமுறைகள் கழிந்தாலும்
உன் பேச்சுதான்
தந்தை எனும் மந்திரமே
என் மூச்சுதான்!

சிங்கம் என்றல்
எம் தந்தை தான்..

காற்றை நிறுத்தி கேளு

படம் : அசல்
இசை : பரத்வாஜ்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : சுனிதா மேனன்

காற்றை நிறுத்தி கேளு
கடலை அழைத்து கேளு
இவன் தான் அசல் என்று சொல்லும்
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா...

காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்..
முகத்தில் குத்துவான் பகைவன்
முதுகில் குத்துவான் நண்பன்
பகையை வென்று தான் சிரிப்பான்
நண்பரை மன்னிதழுவான்
போனான் என்று ஊர் பேசும்போது
புயல் என வீசுவான்
பூமிபந்தின் ஒரு பக்கம் மோதி
மறுபுறம் தோன்றுவான்
தோட்டங்களில் பூக்களிலும்
தோட்டா தேடுவான் !
தோழர்களின் பகைவரையும்
சுட்டே வீழ்த்துவான்
மாயமா ? மந்திரமா ?
தல போல வருமா... தல போல வருமா...

நித்தம் நித்தம் யுத்தம் - இவன்
நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுகில்லை
படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
படுக்கை முழுவதும் ரொக்கம்
காட்டுச் சிங்கம் போல் வாழ்ந்தும்
கண்களில் உறக்கமில்லை
ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை
உயர்வென்று பேசுவான்
சட்டங்களின் வேலிகளை
சட்டென்று தாண்டுவான்!
தர்மங்களின் கோடுகளைத்
தாண்டிட கூசுவான் !
மாயமா ? மந்திரமா ?
தல போல வருமா... தல போல வருமா...

கிட்டே நெருங்கி வாடி

படம் : டிஷ்யூம்
இசை : விஜய் அந்தோனி
பாடியவர்கள் : காயத்ரி & சுக்விந்தர் சிங்

விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்

ஏய் கிட்டே நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி
பட்டா எழுதி தாடி பஞ்சாமிர்த உதட்டுக்காரி
தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
தேக்கு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டுக்காரா
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
தேக்கு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் cake உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

பொத்தி வச்ச புயலா நீ தங்கம் கொட்டி வச்ச வயலா நீ
கட்டி வச்ச பிரியாணி உன்னை திங்கப்போறேன் வர்ரியா நீ
சாத்தி வச்ச கதவா நீ உள்ள ஊத்திவச்ச மதுவா நீ
சேத்து வச்ச பணமா நீ உன்னை எண்ணப்போறேன் கொடுடா நீ
தெப்பக்குளத்துல மூழ்கி குளிக்கையில் ?
ரெட்டை எறும்புகள் உன்னை கடிக்கையில் சக்கர நோயில செத்துடுச்சே

தேக்கு முதுகுக்காரா…
தேக்கு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க அந்த மீசை துடிக்குதேடி

ஆஆ… அன்னா ஒருத்தி போறா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா
அன்னா ஒருத்திபோடா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா

தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
தேக்கு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி

சிலுத்துக்கும் மயிலா நீ என்னை முட்ட வந்த முயலா நீ
விரல்லுல மருதானி இப்போ வைக்கபோறதில்லையா நீ
டாய் சுட்டெரிக்கும் பகலா நீ என்னை சொக்கவைக்கும் இரவா நீ
எட்டி வச்சி மெதுவா நீ எல்லை தாண்டி வரும் களவாணி
வங்கக்கடலிலே வங்கபுயல் சின்னம் பட்டுன்னு கரையை தாண்டிடுச்சே
நெஞ்சிக்கடலிலே வந்தபுயல் சின்னம் போதையில் பட்டுன்னு பொங்கிடுச்சே

தேக்கு முதுகுக்காரி..

தேக்கு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
டாஇ கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டதாடா
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
தேக்கு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் cake உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

இப்பாடலின் வீடியோ இங்கே..


நான் போகிறேன் மேலே மேலே

படம்: நாணயம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் போலே

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

நான் போகிறேன்..


கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா

நானானனான நான நான நானானனான நான நான
நானானனான நான நான ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான
நானானனான நான நான நானானனான நான நான

என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேன்

நான் போகிறேன்..


நானானனான நான நான நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான நானானனான நான நான
நானானனான நான நான

இப்பாடலின் வீடியோ இங்கே..

அதிரி புதிரி ஆரம்பம்

படம்: திரு திரு துரு துரு
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: ராஹுல் நம்பியார், ஜனனி
அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமலி துமலி சத்தம் சத்தம்
கேரக்டர்தான் மாறுமோ நோ வே
கேரர் குணம் ஆகுமோ
நீ உடைகள் அணிந்த கூவம்தான்
பேச்சில் இல்லை சுத்தம் பத்தம் டூ மச்
அதிரி..

நம்ம பார்வைக்கே தெரியாத பக்டேரியா
அதை தேடி கண்டுபிடிச்சு க்ளீன் பண்றா
எல்லா திங்ஸையும் தினம் தொடைச்சு சைஸ் வாரியா
அதுக்கு டேய்லி ஆயுத பூஜை கொண்டாடுறா
பாத்ரூம் போறதுக்கு கூட டைம்டேபல்
ஷெடுல் போட்டு அதை ஃபோல்லோ பண்ணுறா
இவ கனவுல கூட ஏதோ கல்குலேட் பண்ணுறா டூ மச்
ஷகிரா ஆல்பம் கேட்கையில் கஜலு பஜனை போடுறா
டூ மச் டூ மச் டூ மச்

குறட்டை மொழியில் பூகம்பம்
விடிய விடிய தூக்கம் சோ வாட்
செவிகள் கிழிய ஹிப்ஹோப்பும்
ட்ரம்ஸும் மலரும் சத்தம் டாட்ஸ் ரைக்ட்
ஷேவ் பண்னவே சோம்பலோ ஹேய் ஹேய்
தாடியை பார்க்கவோ
காட்டுவாசி போல தோற்றம்
ஐயோ அக்கம் பக்கம் பாவம்
அதிரி..

தினம் ஏர்லி மார்னிங் ஃபைவ் க்லாக்
சுப்ரபாதம் ஃபுல் வாலுமில் ப்லே பண்ணுறா
ஹாட்டல் காரன் இட்லியில் மனுஃபேக்சுரிங் டேட் எங்கேங்குறா
ரோட்டுல யாராச்சும் குப்பை போட்டா
இவ பார்த்துட்டா சண்டைக்கு போறா
இவ கூட வாழ்வது என்னால முடியாது
முடியவே முடியாது ஐயோ நோ நோ

இப்பாடலின் வீடியோ இங்கே..

அழகாய் பூக்குதே

படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்
விரும்பி கேட்டவர் : பூஜா

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகாய்..

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
அழகாய்..

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
அழகாய்..

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
அழகாய்..

இப்பாடலின் வீடியோ இங்கே..

புலி உறுமுது புலி உறுமுது

படம் : வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோனி
விரும்பி கேட்டவர் : கண்ணா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...

ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வரான் பாரு வேட்டைக்காரன்..

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

யார் இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு ஆயுதம் போல் கூறு இவன்
இருபது நகங்களும் கழுகிடா
இவன் இருப்பதே உலகிக்கு அழகிடா
அடங்க மறுத்த உன்னை அழிச்சுடுவான்
இவன் அமிலத்தை மூண்டு தரம் குழிச்சுடுவான்
இவனோட நாயம் தனி நாயம்
அட இவனால அடங்கும் அநிநாயம்
போடு அடிய போடு போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

அச தோமா சக் கமைய தம சோம ஜோதி கமைய வித் ஜோம அமிர்தம் கமய ஓம் சாந்தி சாந்திகி

யார் இவன் யார் இவன் யார் இவன் ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை தான் எவனடா
இவனுக்கு இல்லடா கடி வாளம்
இவன் வரலாற்ற மாத்திடும் வரும் காலம்
திரு மூஞ்சி சேய் எல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்
போடு அடிய போடு போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...

ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வரான் பாரு வேட்டைக்காரன்

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

காதலியே காதலியே

படம் : ஜித்தன்
பாடியவர்: ஹரிஸ் ராகவேந்திரா
இசை: சிறிகாந்த் தேவா
விரும்பி கேட்டவர் : ஏசுராஜா

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்

எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்
இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்

உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே
கனவு மட்டும் எனக்கு உண்டு கண்ணை காணவில்லையே

கடற்கரை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால்தடம்
எந்தன் பாதம் எங்கே வைப்பேன் வந்து சொல்வாய் என்னிடம்

ஒரு வீணையை கைகளில் கொடுத்து என் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய்
ஒரு காதல் நாடகம் நடத்தி அட நீ எனை திரையிட்டு மறைத்தாய்

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

தூங்கும் போது கண்கள் இரண்டும் போர்வை கேட்க கூடுமோ
தண்ணீர் மீது பூக்கும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ

இறந்து போன காதல் கவிதை இரங்கல் கூட்டம் போடுதோ
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிறி குதித்து ஓடுதோ

ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன் எனை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய்
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதல் விடுமுறை நாளோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்

இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ

இப்பாடலின் வீடியோ இங்கே..

மியாவ் மியாவ் பூனை

படம் : கந்தசாமி
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள் : விக்ரம், பிரியா ஹமேஷ்
விரும்பி கேட்டவர் : இசக்கி முத்து

மியாவ் மியாவ் பூனை
அட…
மீசை இல்லா பூனை
திருடித் திங்கப் பார்க்கறியே
திம்சுக்கட்ட மீனை?

மில்க்கை தேடும் பூனை
சீ…போ‘ன்னு விரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை!

நம் இதயம் ஒண்ணு
நம் உடல்தான் ரெண்டு
நாம் ஒண்ணா சேர்ந்தா ஆவோம் மூணு

உன் பார்வை ஒண்ணு
அதில் அர்த்தம் இரண்டு
அது சொல்லத் தூண்டும் வார்த்தை மூணு

மியாவ் மியாவ் பூனை...

வேகத்துக்கு நான் பழசு
வெட்கத்துக்கு நான் புதுசு

மோதலுக்கு நான் பழசு
காதலுக்கு நான் புதுசு

நம் மெத்தை ஒண்ணு
அதில் தூக்கம் ரெண்டு
அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு

உன் இடுப்பு ஒண்ணு
அதில் உடுப்பு ரெண்டு
அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூனு

மியாவ் மியாவ் பூனை...

கூச்சத்துக்கு லீவு கொடு
தேகத்துக்கு நோவு கொடு

ஆடைகளை தூர விடு
ஆசைகளை சேர விடு

நம் முத்தம் ஒண்ணு
அதில் எச்சில் ரெண்டு
அந்த போதையில் மறக்கும் காலம் மூன்று

உன் மேனி ஒண்ணு
அதில் தேனீ ரெண்டு
கொட்டும் நானே ஹனி மூணு

மியாவ் மியாவ் பூனை...

மருவத்தூர் ஓம் சக்தி

படம்: ராஜ ராஜேஸ்வரி
இசை : தேவ
விரும்பி கேட்டவர் : ஜெயசித்ரா ராமச்சந்திரன்

மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி
உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி
கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி
மாயவரம் அபயாம்பிகா.

மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி
காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா
திருவாரூர் கமலாம்பிகா

நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா
பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா
சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி
ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி
அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி
பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி
ஆரல்வாய் இசக்கி அம்மா,
வாடீ! ஆரணி படவேட்டம்மா!

திருவாங்கூர் மேகவல்லி, தாயி!
திருக்கூடல் மதுரவல்லி!
புதுக்கோட்டை புவனேஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி
மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி
நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா.

மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே
செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா !
கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி
மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி
வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா
மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள்
காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா !

விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி
காரைக்குடியம்மா பொற்கூடையம்மா !
ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி
திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி!

ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி !"

எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி
அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா
சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா
கோயமுத்தூரின் கொணியம்மாவே
சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா

கொல்லிம்லை வாழும் எட்டுகைய‌ம்மா
வாகேஸ்வ‌ரி, பாகேஸ்வ‌ரி வைதிஸ்வ‌ரி யோகேஸ்வ‌ரி
ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே
அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி
ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே

ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி
மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி
திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி
திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா

ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!

தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம்
மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே
அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே
பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா

அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா
உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட‌
மாயம்மா வா வா

ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!

குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம்
நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா

திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி
சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா
பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு
சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி

கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர
அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே
வரவேண்டும்
வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே

தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி
மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா

ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள்
ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி
திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கொட்டை மாரி

திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா

இப்பாடலின் வீடியோ இங்கே..

கிழக்கே பார்த்தேன்

படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், போனி சக்கரவர்த்தி
விரும்பி கேட்டவர்: சௌமியா

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி

என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி
தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழி
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழி
தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி

Well My Friend
I have something to say
I want you to listen
Listen to me
This is what I have to say
Here It Goes..

தாகம் என்று சொல்கிறேன்
மரக் கன்று ஒன்றை தருகிறாய்
பசிக்குது என்று சொல்கிறேன்
நெல்மனி ஒன்றை தருகிறாய்
உந்தன் கை விரல் பிடிக்கையில்
புதிதாய் நம்பிக்கை பிறக்குது
உந்தன் கூட நடக்கையில்
ஒன்பதாம் திசையும் திறக்குது
என் பயணத்தில் எல்லாம் நீ
கைக்காட்டி மரமாய் முளைத்தாய்
என் மனதை உழுது
நீ நல்ல விதைகளை விதைத்தாய்
என்னை நானே செதுக்க
நீ உன்னையே உலியாய் தந்தாய்
என் பலம் என்னவென்று எனக்கு
நீ இன்றுதான் உணர வைத்தாய்

கிழக்கே..


மழையோ உந்தன் புன்னகை
மனசெல்லாம் மெல்ல நனையுதே
வேருக்குள் விழுந்த நீர் துளி
பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே
உனக்குள் ஏற்ப்படும் உத்சவம்
என்னையும் குதூகலப் படுத்துதே
தோழி ஒருத்தி கிடைத்தால்
இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
இதுவரை இந்த உண்மை
ஏன் தெரியவில்லை எவர்க்கும்
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி
படைத்தவன் கேட்டால் கூட
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி

கிழக்கே..

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது

படம்: உயிரோடு உயிராக
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி
வரிகள்: வைரமுத்து
விரும்பி கேட்டவர்: சௌமியா
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்

இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம் ... (2)

பூவுக்கெல்லாம்..

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது
காற்றை குழல் கைது செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலந்ர்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

பூவுக்கெல்லாம்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

பேருந்தில் நீ எனக்கு

படம்: பொறி
இசை: தினா
பாடியவர்கள்: M.பாலகிருஷ்ணா, மதுஸ்ரீ
விரும்பி கேட்டவர்: சௌமியா

ஆண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்ல கோபம்

பெண்: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே

பேருந்தில்..

ஆண்: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் வருகிற முதல் கூச்சம்

பெண்: பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

ஆண்: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே

பெண்: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே

பேருந்தில்
..

ஆண்: தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெண்: தேய்பிறை போல் படும் நகக் கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆண்: செல்ஃபோன் சிணிங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே

பெண்: எழுதும் கவிதையின் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே

பேருந்தில்...
இப்பாடலின் வீடியோ இங்கே..

ரகசியமானது காதல்

படம்: கோடம்பாக்கம்
இசை: சிற்பி
பாடியவர்: ஹரிணி

விரும்பி கேட்டவர்: சௌமியா

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிசத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

ரகசியமானது..

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல

ரகசியமானது..

இப்பாடலின் வீடியோ இங்கே..

ஒரு வெட்கம் வருதே வருதே

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்த்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
விரும்பி கேட்டவர்: சௌமியா
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னைக் களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்
உன் குறும்பிலே நானே தூங்கிடுவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்க்குள் பெண்மை இருக்கிறதே
கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்

மழை இன்று..
Align Center
ஆ.. காற்றில் கலந்து நீ
என் முகத்தினை நீயும் மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே வரணும் எதிரினிலே
வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே

ஒரு வெட்கம்..

இப்பாடலின் வீடியோ இங்கே..

ஏ நிலவே ஏ நிலவே

படம்: முகவரி
இசை: தேவா
பாடல்: உன்னி மேனன்
வரிகள்: வைரமுத்து
விரும்பி கேட்டவர்:
சௌமியா
நிலவே நிலவே
நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்

நிலவே ஏ நிலவே
நீ விண்ணை விட்டு மண்ணை தொட்டு
கடலுக்குள் புகுந்து விட்டாய்

இமை மூட மறுத்து விட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்றது
பசும் பூங்கொடி
நிஜம் என்னடி
இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே

நிலவே ஏ நிலவே
நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்

நினைந்து நினைந்து உள்ளம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்தும் ரத்தம் கசிகின்றதே

ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல் சொன்னால் உயிரே ஊறி விடும்
அடியே அடியே முடியாதென்றால் இதயம் கீறிவிடும்
நிலா... நீயல்லவா..
தேய்பவன் நானல்லவா காரணம் நான் சொல்லவா
கால்கள் இல்லாமலே காற்று நடை போடலாம்
நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா

இமை மூட மறுத்து விட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்றது
பசும் பூங்கொடி
நிஜம் என்னடி
இது வாழ்வா சாவ எதை நீ தருவாய் பெண்ணே

நிலவே ஏ நிலவே..

இப்பாடலின் வீடியோ இங்கே..

மனமே நலமா?

படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ்
விரும்பி கேட்டவர்: சௌமியா
மனமே நலமா?
உந்தன் மாற்றங்கள் நிஜமா?
புது புது விதமா
ஏதோ வந்ததே சுகமா?

நீ சொல்லு நடந்தது என்ன?
என்னை மாற்றி போனது என்ன?
அவளை நான் கண்டுகொண்டேன்
அங்கே நான் தொலைந்து போனேன்


மனமே நலமா?
உந்தன் மாற்றங்கள் நிஜமா?
புது புது விதமா
ஏதோ வந்ததே சுகமா?

மனமே நலமா?
உந்தன் மாற்றங்கள் நிஜமா?
புது புது விதமா
ஏதோ வந்ததே சுகமா?

நீ சொல்லு நடந்தது என்ன?
என்னை மாற்றி போனது என்ன?
அவளை நான் கண்டுகொண்டேன்
அங்கே நான் தொலைந்து போனேன்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு

படம்: திருப்பாச்சி
இசை: தினா
வரிகள்: பேரரசு
பாடல்: திப்பு
விரும்பி கேட்டவர்: புகழ்

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு
முகவரி தேவை இல்ல - இல்ல இல்ல
நீ எந்த உறவு நான் எந்த உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல - இல்ல இல்ல

தொப்புள் கொடி உறவா - இல்ல இல்ல
அட கட்ச்சிக்கொடி உறவா - இல்ல இல்ல
மேட்டுக்குடி உறவா - இல்ல இல்ல
அட கள்ளுக்கட உறவா - இல்ல இல்ல

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா (2)

நீ எந்த ஊரு...

சாமி வரம் தந்துட்டா
கொட்டும் மழை கொட்டுண்டா
ஏழை மனம் பொங்குண்டா
நான் அயனாறு பக்தண்டா

மன்ன நம்பி வேறு
வின்ன நம்பி யாரு
என்ன நம்பி யாரும் கெட்டதில்ல பாரு

உனக்கொரு பேரு எனகொரு பேரு
ஒன்னு சேர்த்து பாரு இந்தியனு பேரு

பொறப்பும் இறப்பும் அவன் கையில
நாம வாழும் வாழ்க்க நம்ம கையில ... (2)

நீ எந்த ஊரு...

அம்மை அப்பன் தானடா
நாமை ஆளும் சாமிடா
கருவற தோழிடா
நம்ம உயிர் நாடிடா

கன்ன பொத்தி வாழு
காத பொத்தி வாழு
வாய பொத்தி வாழு
நம்ம காந்தி மொழி கேளு

ஆத்திகம்தான் மௌசு
சாத்தியம்தான் பேச்சு
ஆசை எல்லாம் பூச்சு
நம்ம புத்தர் கொடி ஏத்து


பொறப்பும் இறப்பும் அவன் கையில
நாம வாழும் வாழ்க்க நம்ம கையில ... (2)

தொப்புள் கொடி உறவா - இல்ல இல்ல
அட கட்ச்சிக்கொடி உறவா - இல்ல இல்ல
மேட்டுக்குடி உறவா - இல்ல இல்ல
அட கள்ளுக்கட உறவா - இல்ல இல்ல

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா .

நாம அண்ணன் தம்பிடா
இப்பாடலின் வீடியோ இங்கே..

மாமரத்துப்பூவெடுத்து

படம் : ஊமைவிழிகள்
பாடலைப்பாடியவர்கள் : SN.சுரேந்தர்,சசிரேகா
இசையமைத்தவர்:
மனோஜ் ஜியன்
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்

மாமரத்துப்பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழலெடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புதுநாடகம் விரைவில் அரங்கேறணும்

கூந்தலில் பூ சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிடமனசுத்துடிக்குது ஓஒ ஒ
கூடவந்த நாணம் தடுக்குது
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது

மாமரத்துப்பூவெடுத்து..


சித்திரைப்பூவிழிப் பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா
முத்துரதம் எனக்குத்தானம்மா
உனக்காக உயிர்வாழ இந்த பிறவிஎடுத்தது
உயிரோட உயிரான இந்த உறவு நிலைத்தது..

மாமரத்துப்பூவெடுத்து..
இப்பாடலின் வீடியோ இங்கே..
Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape